ஷா ஆலாம், ஏப்ரல் 9 – தனியார் கிளினிக் ஒன்றின் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படாதது தொடர்பில், வைரலாகி இருக்கும் பிரச்சினை குறித்து, ஆட்பலத் துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
அதனை மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தமது X சமூக ஊடக பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஆட்பலத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது. தகவல் கொடுத்ததற்கு நன்றி” என ஸ்டீவன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பிரபல தனியார் கிளினிக் தொடர் ஒன்றின், பணியாளர், கடந்த மாதத்திலிருந்து முதலாளியால் தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியிருந்தது, சமூக ஊடகங்களில் வைரலானது.
அதோடு, தங்களுக்கு EPF – ஊழியர் சேம நிதியும், சொக்சோவும் கூட பிடித்தம் செய்யப்படவில்லை என அந்நபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.