Latestமலேசியா

தனியொரு கட்சி நிலையான ஓர் அரசாங்கத்தை அமைக்காது

கோலாலம்பூர், மே 9 – அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின், நாட்டில் தனி ஒரு கட்சி நிலையான ஓர் அரசாங்கத்தை அமைக்க இயலாது என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலில் அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடும். ஆனால் அவற்றில் எந்தவொரு கட்சியும் தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

போட்டியிடும் அனைத்து கட்சிகளும் சிறிய எண்ணிக்கையிலான இடங்களிலே வெற்றி பெறும். அந்த கட்சிகள் மத்தியில் அதிக இடங்களில் வெற்றிபெறக் கூடிய கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கும்.

அவ்வாறு சிறுபாண்மையில் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்காது. எனவே, அரசாங்கத்தை வலுப்படுத்த பங்காளிகளுடன் அந்த கட்சி கூட்டணியை அமைக்குமென்றாரவர்.

அந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சி வெளியேறினால் கூட அரசாங்கம் கவிழும். 15- வது பொதுத் தேர்தலில்  இந்த நிலையே ஏற்படக் கூடுமென மகாதீர் உத்துசான் மலேசியாவிற்கு வழங்கியிருந்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

இவ்வேளையில் , கட்சிக்குள் பிரிவும், மக்களிடம் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் அம்னோவும், பெர்சாத்து கட்சியும் முன்புபோல் வலுவாக இல்லையென மகாதீர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!