Latestமலேசியா

தன்னுடன் வாழ மறுத்த மனைவியை பொதுவிடத்தில் அடித்த ஆடவன்

கோலாலம்பூர், பிப் 2 – தன்னோடு வாழ மறுத்த மனைவியை, பொதுவிடத்தில் வைத்து முதுகில் குத்தியதோடு, முடியையும் பிடித்து இழுத்த ஆடவனைப் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக அந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. அச்சம்பவம் , கெடா , ஜித்ரா. தாசேக் பண்டார் டாருல் அமானில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியிருப்பதாகவும், கடந்தாண்டு நவம்பர் தொடங்கி அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும், குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் ரொட்சி அபு ஹாசான் தெரிவித்தார்.

சம்பவத்தன்று, தனது கணவரின் பராமரிப்பில் இருக்கும் 6 வயதான தனது மகளை அழைத்துச் செல்வதற்காக, 22 வயதான அந்தப் பெண் அந்த ஏரிப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிட்டு பொது மக்களின் உதவியைக் கேட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பொது மக்கள் உதவிக்கு வந்ததை அடுத்து, அந்த ஆடவன் அங்கிருந்து சென்றுவிட்டதாக நொர்டி அபு ஹாசான் கூறினார்.

அந்த சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸ், 33 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவன் தலைமறைவாகியிருப்பதோடு, அவன் மீது அடித்து காயத்தை விளைவித்தது தொடர்பில் பழைய குற்றப் பதிவு இருப்பதும் தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!