
ஹங் காங், மார்ச் 27 – தன்னை வெட்டிக் கொல்லவிருந்த கசாப்புகாரரையே பன்றி ஒன்று கொன்ற சம்பவம், ஹங்காங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் துப்பாக்கியால் சுடப்பட்டு மயக்கத்தில் இருந்த பன்றியைக் கொல்ல , 61 வயதான கசாப்புகாரர் வெட்டுக் கத்தியை ஓங்கியிருக்கிறார்.
அப்போது திடிரென முழித்து கசாப்புக்காரரை அந்த பன்றி எட்டி உதைக்க அவர் கீழே விழுந்து காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழே விழுந்து சுயநினைவற்ற நிலையில் கிடந்த அந்த கசாப்புக்காரரின் இடது காலில் பெரிய வெட்டு இருந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.