சான் ஃபிரான்சிஸ்கோ, டிசம்பர்-16, தபேலா இசையை உலகளவில் பிரபலப்படுத்திய இசைக் கலைஞர் சாகிர் உசேன் (Zakir Hussain) தனது 73-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த அவர், கடந்த சில வாரங்களாக இரத்த அழுத்தப் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இதய பிரச்னைக்காக, நேற்று சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சாகிர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சா’கிர் உசேன், 7 வயதிலிருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இந்திய இசைத் துறை மட்டுமல்லாமல் அனைத்துலக அளவிலும் அவர் புகழ்பெற்றவர்.
இந்திய இசைத் துறைக்காற்றியச் சேவைகளுக்காக, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ன.
பிரசித்திப் பெற்ற சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது.
தனது சாதனையின் உச்சமாக, இசையுலகின் ஆஸ்கார் என வர்ணிக்கப்படும் கிராமி விருதை 4 சாகிர் உசேன் முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.