
கோலாலம்பூர், ஆக 25 – தமக்கு எதிராக கடந்த மாதம் குண்டு வெடிப்பு மிரட்டல் விடுக்கப்பட்டபோதிலும் மனதில் பட்டதை தொடர்ந்து பேசுவேன் என மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரான சித்தி காசிம் தெரிவித்திருக்கிறார். கடந்த ஜூலை மாதம் அவரது காருக்கு கீழே வெடிப்பு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பக்சாரில் உள்ள கார் பட்டறையில் Service செய்வதற்கு அவரது கார் அனுப்பிவைக்கப்பட்டபோது அதன் அடியில் இருந்த வெடிப்பு கருவியை அகற்றுவதற்கு வெடிமருந்து அகற்றும் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அவரது காருக்கு அடியில் வெடிமருந்து வைத்த சந்தேகப் பேர்வழியை கண்டுபிடிக்க முடியவில்லையென கடந்த வாரம் கோலாலம்பூர் போலீசார் ஒப்புப்கொண்டனர். எனினும் மனித உரிமை விவகாரங்களில் தொடர்ந்து வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் குரல் கொடுப்பதிலிருந்து எவரும் தம்மை தடுக்க முடியாது என சித்தி காசிம் தெரிவித்தார். எல்லோரும் ஒரு நாள் மரணத்தை தழுவுவதை நிறுத்த முடியாது. ஆனால இறைவன் என்னை இன்னமும் நேசிப்பதாக நான் நினைக்கிறேன். எனவே மற்றவர்களின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என அவர் கூறினார்.