Latestமலேசியா

தமது தலைமையிலான கெம்பாரா கெனாலி போர்னியோ குழுவினரை வரவேற்க திரண்ட மக்கள் குறித்து பேரரசர் நெகிழ்ச்சி

சிபு, செப் 12 – தமது தலைமையிலான ‘Kembara Kenali Borneo’ சுற்றுலா குழுவினைரை வரவேற்பதற்கு சபா மற்றும் சரவா மக்கள் திரளாக திரண்டது குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா தமது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 3 ஆம்தேதி தவாவில் தொடங்கிய அந்த 1,700 கிலோமீட்டர் பயணத்தில் பேரரசர் தம்பதியர் நேற்று சிபுவிற்கு வருகை புரிந்தனர். தமது குழுவினரை வரவேற்பதற்கு சபா மற்றும் சரவா மாநில மக்கள் திரளாக திரண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தியது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா தெரிவித்தார். சிபுவில் போர்னியோ மக்களின் கனிவான வரவேற்பைக் கண்டும் , தம்மையும், பேரரசியார் மற்றும் தங்களது குடும்பத்தினரை வரவேற்பதற்காக திரண்டிருந்தது குறித்தும் சொல்வதற்கு வார்த்தையில்லையென நேற்றிரவு கம்போங் பண்டுங் MUC மண்டபத்தில் நடைபெற்ற விருந்தில் உரையாற்றியபோது அல் சுல்தான் அப்துல்லா கூறினார். அந்த விருந்து நிகழ்வில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப், சரவா முதலமைச்சர் தான் ஸ்ரீ அபாங் ஜோஹரி துன் ஒபேங் , சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மற்றும் ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரொன் அகோ டாகங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதனடையே தங்களது ‘Kembara Kenali Borneo’ பயணத்தின் அடுத்த கட்டமாக பேரரசர் தம்பதியரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இன்று கூச்சிங் சென்றடைவர். சரவா புரூக் ஆட்சியின்போது கட்டப்பட்ட ‘Fort Alice’ கோட்டைக்கும் பேரரசர் தம்பதியர் வருகை புரிவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!