சென்னை, ஆகஸ்ட்-13 – தமிழகத்தின் தேனியில் மேற்கூரை பழுதான அரசு பேருந்து, கடும் மழையின் போது மழை நீர் கொட்டியபடி பயணித்த வீடியோ வைரலாகியுள்ளது.
பேருந்தின் இருக்கைகள் முழுவதும் மழைநீர் வடிந்ததால் பயணிகள் நின்று கொண்டே மழையில் நனைந்தபடி பயணம் செய்தனர்.
பெண்கள், வயதானவர்களும் அவர்களில் அடங்குவர்.
பெருந்து ஓட்டுநரும் மழையில் நனைந்தாவாரே ஓட்டிச் சென்றார்.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்து பரிதாபம் தெரிவித்தனர்.
பழுதான அரசு பேருந்துகளின் மேற்கூரைகளைப் போக்குவரத்துக் கழகம் விரைந்து சரி செய்ய வேண்டும்.
மழைக்காலங்களில் பொது மக்கள் இப்படி கஷ்டப்படுவதை இனியும் அனுமதிக்கக் கூடாது என குரல் எழுப்பினர்.