Latestஇந்தியா

தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்

சென்னை, டிச 4 – தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார். 88 வயதான அவர் இன்று விடியற்காலை 5. 30 மணியளவில் ஸ்டார் மருத்துவமனையில் இறந்தார். அவர் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 31ஆம் தேதி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதிவரை அவர் அப்பதவியில் இருந்தார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். அவர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் நலக் குறைவினால் ஐதரபாத்தில் ரோசையா காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!