Latestஇந்தியா

தமிழகத்தில் உட்பட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை, மே 2- தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குகள் எண்ணப்படும் பணி இந்திய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போது அனைத்து வாக்கு மையங்களிலும் முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. அதன் பின்னர்தான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை தொடங்கும்.
கோவிட் பரவலை தொடர்ந்து கடுமையாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் வருவதில் தாமம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான முடிவுகள் அனைத்தும் முழுமையாக வெளிவருவதற்கு இன்று நள்ளிரவுவரை ஆகலாம என கூறப்படுகிறது. எனினும் மலேசிய நேரப்படி மாலை 4 மணிக்குள் தமிழகத்தில் எந்த கட்சி முன்னணியில் இருக்கிறது என்று தெரியும் வாய்ப்பு உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!