Latestமலேசியா

ஆடவர் ஒருவர் வைரலாக்கிய காணொளி தொடர்பில் தெங்கு ஷப்ருல் போலீசில் புகார் செய்வார்

கோலாலம்பூர், மார்ச் 7 – தாம் தவறாக நடந்துகொண்டதைப் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்றை ஆடவர் ஒருவர் வெளியிட்டது தொடர்பில் Tengku Zafrul Aziz போலீசில் புகார் செய்யவிருக்கிறார். தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் Australia-வுக்கு உடன் சென்றுள்ளதால் நாடு திரும்பியவுடன் போலீசில் புகார் செய்யவிருப்பதாக முதலீடு, வர்த்க மற்றும் தொழிலியல் அமைச்சருமான Tengku Zafrul Aziz தெரிவித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு பொருளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் தாம் தவறாக நடந்துகொண்டதாக காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. நல்ல நோக்கத்தோடு அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நான் பெற்றுக்கொண்டேன். எங்களது குழுவினர் முன்கூட்டியே அந்த குற்றச்சாட்டு குறித்த தகவலை அறிந்திருக்கவில்லை அல்லது அந்த காணொளியில் இடம்பெற்ற உள்ளடக்கத்தின் நோக்கத்தை அறிந்திருக்கவில்லை.

எனவே அந்த காணொளி குறித்து எனது குழுவினர் விசாரணை மேற்கொண்டனர் . அந்த காணொளி தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்குவதற்காக மலேசியா திரும்பியவுடன் போலீசில் புகார் செய்யப் போகிறேன் என இணையத் தள பதிவேட்டில் Tengku Zafrul தெரிவித்திருக்கிறார். Tengku Zafrul கையெழுத்திடப்பட்ட போலியான புரிந்துணர்வு உடன்பாடு மகஜர் தொடர்பான நிகழ்வில் தலைமை செயல் அதிகாரியாக தாம் பணியாற்றுவதற்கு 800 ரிங்கிட் கொடுக்கப்பட்டதாக அந்த காணொளியில் அறிமுகம் இல்லாத ஆடவர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!