Latestஇந்தியா

தமிழகத்தில் முழு ஊரடங்கு ; வெறிச்சோடி கிடக்கும்  சாலைகள்

சென்னை, ஜன  9 – தமிழகத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன்,  ஒம்க்ரோன் மருட்டலும் ஏற்பட்டிருப்பதை அடுத்து,  அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது.
கடந்த 6-ஆம் தேதி முதல் இரவு மணி  10-லிருந்து  காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள்  மூடப்பட்ட நிலையில்  மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டது.
பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளும்  இயங்கவில்லை. ஓட்டல்களில்  பொட்டலமிட்டு பொருட்களை விநியோகிக்கும் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வார இறுதியில் மக்களின் நடமாட்டம் கடுப்பட்டுத்தப்பட்டிருப்பதால் , தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!