Latestஇந்தியா

தமிழகத்தில் 131க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி

சென்னை, மே 2- தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 131 தொகுதியில் முன்னணியில் இருந்துவருகிறது.  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் சுற்றிலிருந்து கொளத்துர் தொகுதியில் தொடந்து முன்னணியில் இருந்து வருகிறார். சென்னையில் உள்ள அனைத்து தொகுதியிலும் திமுக முன்னனியில் உள்ளது, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னணியில் இருந்து வருகிறார்.

மேலும் நாகர் கோவில், திருச்சுழி, தியாகராய நகர், விளாத்திகுளம், மன்னார்குடி, ராஜ பாளையம், முதுகுளத்தூர், பொள்ளாச்சி , சேப்பாக்கம் உப்பட 131 தொகுதிகளில் திமுக கூட்டணி தற்போது முன்னனியில் இருப்பது அக்கூட்டணி தொண்ட்ர்களிடையே உற்சாகத்தை எற்படுத்தியிருந்தாலும் அதிமுக கூட்டணி மிக நெருக்கமாக பின்தொடர்வது ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுக கூட்டணி 160க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும்  எனக் கூறியிருந்ததே அதற்கு காரணமாகும்.

எடப்பாடி பழினிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி  தற்போது சுமார் 100 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதிமுகவில் பெரும்பாலான அமைச்சர்கள் முன்னணியில் உள்ளனர். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிச்சாமி முன்னணியில் இருந்து வருகிறார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைரான கமல்ஹாசன் முன்னணியில் இருந்து வருகிறார். விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்ந் பின்னடைவை சந்தித்து வருகிறார். கோவில்பட்டி தொகுதியில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்து வருகிறார். திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் நடிகர் சீமான் பின்னடைவில் இருந்துவருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!