
கோலாலம்பூர், ஜன 9 – இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் உற்பத்தி நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடுவதற்காக, விவசாய – உணவு பாதுகாப்பு மீதான அமைச்சர் மொஹமட் சாபு, தமிழகம், நாமக்கல் பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்தார்.
மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பாதுகாப்பானதாகவும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளைக் காட்டிலும் மலிவானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, வார இறுதியில் அந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
தமிழகம், சென்னையில் இருந்து 8 மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கின்றது இந்த நாமக்கல் முட்டை உற்பத்தி பண்ணை.
அப்பண்ணையில் உற்பத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அவர், சுத்தமான சூழ்நிலையில் அங்கு முட்டைகள் உற்பத்தி ஆவதோடு, மலேசியர்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பானது எனவும் உறுதியளித்தார்.
அத்துடன் அப்பண்ணையில் இருந்து வெளியாகும் முட்டைகளின் தரத்தில் தாம் மனநிறைவு கொள்வதாகவும் மொஹமெட் சாபு தெரிவித்தார்.