Latestமலேசியா

ஜோகூரில், மதுபோதையில் போக்குவரத்துக்கு எதிராக மைவியை செலுத்திய ஆடவன் படுகாயம்; ஐந்து வாகனங்கள் விபத்து

ஜோகூர் பாரு, ஜனவரி 2 – ஜோகூர் பாருவிலுள்ள, EDL நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு எதிராக பயணித்த புரோடுவா மைவி காரால், ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

நள்ளிரவு மணி 12.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.

20 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவன் ஒருவன், போக்குவரத்துக்கு எதிராக செலுத்திய அந்த மைவி ரக காரை, நால்வர் பயணித்த மிட்சுபிஷி டிரைடன் நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் கவிழ்ந்து கிடந்த அந்த வாகனத்தை பின்னர் ஹோண்டா சிட்டி, தோயோத்தா வியோஸ், ஆடி ஏ3 ரக கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

எனினும், அவ்விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. பலத்த காயங்களுக்கு இலக்கான மைவி ஓட்டுனர், சுல்தான் அமினா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.

இதர வாகனமோட்டிகள் சிராப்பு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில், மைவி ஓட்டுனத் மது போதையில் காரை செலுத்தியது தெரிய வந்துள்ளது.

அவ்விபத்து தொடர்பில், 1987-ஆம் ஆண்டு, போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!