Latestஇந்தியா

தமிழக தேர்தல் முடிவுகள் 2021

தொடர் நேரலை நிலவரம்

11:59 PM : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி !

11:55 PM : கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விட 1,439 அதிக வாக்குகள் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் 51,087 வாக்குகளைப்பெற்றும் எதிர்பாரா தோல்வியை தழுவியுள்ளார்

10:20 PM : ஆவடி தொகுதியில் அதிமுக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் 53,929 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் நாசரிடம் தோல்வி !

10:05 PM : தியாகராயநகரில் அதிமுக வேட்பாளர் முன்னிலை. பின்னடைவுக்கு வந்தார் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி

10:04 PM : அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வி

9:05 PM : கோவில்பட்டியில் டிடிவி தினகரனை விட 8145 அதிக வாக்குகள் பெற்று அதிமுகவின் கடம்பூர் ராஜு முன்னிலை

8:45 PM : வானதி சீனிவாசன் 1114 வாக்கு வித்தியாசத்தில் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். கமல்ஹாசன் இரண்டாம் நிலையில் இருக்கிறார்.

8:33 PM : போடிநாயக்கனூர் தொகுதியில் 4708 வாக்கு வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை

8:28 PM : திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சீமான் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறார். திருவொற்றியூரில் மூன்றாம் நிலையை கைப்பற்றியுள்ளார் சீமான்

8:26 PM : பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் 890 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனை முந்துகிறார்

8:21 PM : கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 5,128 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரனை ஓரம்கட்டுகிறார்

8:20 PM : எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி மாபெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார் !

8:18 PM : 22ஆம் சுற்றின் முடிவில் 43,629 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார் கமல்ஹாசன்

8:13 PM : எடப்பாடி பழனிச்சாமி 92,868 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சம்பத்குமாரை பெரிதும் முந்துகிறார். இந்நிலையில் இவருக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 160,576

8:11 PM : கோவில்பட்டியில் டிடிவி தினகரன் அதிமுகவின் கடம்பூர் ராஜு விட 4,923 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார

8:09 PM : தற்போதைய நிலவரப்படி கமல்ஹாசன் 41,349 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் 40,370 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் என்பது 979 ஆகும்.

8:05 PM : கமல்ஹாசன் 39,326 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 37,694 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனும் 36,432 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் இருக்கின்றனர். கோவை தெற்கில் வெற்றி பெறப்போகும் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க இன்னும் 6 சுற்றுகள் எஞ்சியிருக்கின்றன.

7:25 PM : 35,117 வாக்குகள் பெற்று 19ஆவது சுற்றின் முடிவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்

7:24 PM : காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 3500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி !

7:12 PM : சூழல் இனமுமே திமுகவுக்கு சாதகமாக இருக்கின்றது. 156 இடங்களில் அவர்களின் கூட்டணி முன்னிலையில் இருக்கின்றது. திமுக மட்டுமே தற்போதைய நிலவரத்தைப் பொருத்தவரையில் அறுதிப் பெரும்பான்மையில் 122 இடங்களுடன் முன்னிலையில் இருக்கின்றது

6:42 PM : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 1,21,166 வாக்குகளுடன் 71,003 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வின் தங்கதமிழ்ச்செல்வனை வீழ்த்துகிறார்

6:34 PM : வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார் வெற்றி !

6:32 PM : வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி !

6:24 PM : அரக்கோணம் தொகுதியில் அதிமுக வெற்றி !

6:20 PM : பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை கடந்து 153 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை. இவ்வேளையில் திமுக மட்டும் தனியாக 119 இடங்களில் முன்னிலை

6:18 PM : தமிழகத்தின் முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின் !

6:16 PM : 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகிறது திமுக

6:14 PM : சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ! சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் 17062 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் திமுகவிற்கு வெற்றியை ஈட்டி தந்துள்ளார்.

6:11 PM : முதலிடத்தில் கமல்ஹாசன் 26,002 வாக்குகளுடனும் இரண்டாமிடத்தில் பாஜகவைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் 24,257 வாக்குகளுடனும் மூன்றாம் இடத்தில் காங்கிரஸ் 21,993 வாக்குகளுடன் கோவை தெற்கில் மோதுகின்றனர்

6:08 PM : கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களின் போது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்த மயிலாப்பூர் தொகுதி இம்முறை திமுக வசம் போகக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. மயிலாப்பூரில் திமுக வேட்பாளர் 25,383 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்

6:05 PM : திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 16,638 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் திருவெற்றியூரில் 32,952 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் முதலிடம் பெற்றிருக்கிறார்

6:03 PM : அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் என மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது திமுக

6:00 PM : மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த வி.பொன்ராஜ் 6,994 வாக்குகள் பெற்று அண்ணாநகர் தொகுதியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

5:45 PM : குன்னூரில் திமுக வெற்றி !

5:44 PM : தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் தற்போது 1166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்

5:38 PM : தொடர்ந்து காட்பாடி தொகுதியில் பின்னடைவில் இருந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தற்போது 87 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். துரைமுருகன் 10-வது முறையாக காட்பாடியில் போட்டியிடுகிறார் 12வது முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்குகிறார். தனது அரசியல் வாழ்வை திமுகவில் தொடங்கியபோது அவர் முதன் முதலாக போட்டியிட்ட தொகுதி காட்பாடி ஆகும்.

5:26 PM : விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி !

5:23 PM : கரூர் சட்டமன்ற தொகுதியில் நெருக்கமான போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் திமுக வேட்பாளரை விட வெறும் 212 வாக்குகளே அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

5:19 PM : திருமங்கலம் தொகுதியில் வாக்குப் பெட்டி எண் மாறி இருப்பதாக கூறி தேர்தல் அலுவலரிடம் திமுக முகவர்கள் வாக்குவாதம். ஆகவே திருமங்கலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை இப்போதைக்கு நிறுத்தம் காண்கிறது.

5:13 PM : 24,275 வாக்குகளுடன் கோவை தெற்கில் முன்னிலை வகிக்கிறார் கமல்ஹாசன். இருப்பினும், கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளர்களுக்கிடையிலான மும்முனைப் போட்டி என்பது வலுப்பெற்றுக் கொண்டே இருக்கின்றது

5:08 PM : திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார் !

4:58 PM : கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 13,165 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் வெற்றி !

4:55 PM : திருவண்ணாமலை தொகுதியில் 51,121 வாக்கு வித்தியாசத்தில் திமுக பாஜகவை முந்துகிறது

4:52 PM : 23 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான பாமக 6 இடங்களில் முன்னிலை

4:50 PM : உதயசூரியன் சின்னத்தில் 6 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்களில் முன்னிலை

4:49 PM : 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

4:47 PM : தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் 123 இடங்களில் திமுக முன்னிலை

4:39 PM : தற்போது 50,000-த்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். அவரது வாக்குகள் 80,000-த்தை நெருங்குகின்றன

3:56 PM : சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மயிலாப்பூரை தவிர 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி தொகுதியைத் தவிர பத்தில் ஒன்பது தொகுதிகளில் திமுக முந்துகிறது.

3:53 PM : திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து 9 தொகுதிகளிலுமே திமுக முன்னிலையில் இருக்கின்றது.

3:38 PM : கோவை தெற்கு தொகுதியில் வெகுசில வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி மூன்றாம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது பாஜக

3:34 PM : 9-வது சுற்று முடிவிலும் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் 6371 வாக்குகள் குறைவாக பெற்று பின்தங்குகிறார்

3:20 PM : கோவை தெற்கு தொகுதியில் 5-வது சுற்றில் கமல்ஹாசன் முன்னிலை

3:17 PM : திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட 8791 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதே தொகுதியில் போட்டியிடும் சீமான் 11,869 வாக்குகளைப் பெற்று இன்னமும் மூன்றாம் இடத்திலேயே இருக்கிறார்

3:12 PM : சென்னை கொளத்தூர் தொகுதி 6-வது சுற்று முடிவில் ஸ்டாலின் 27,138 வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அத்தொகுதியில் வாக்கு வித்தியாசம் 18,810 ஆக இருக்கின்றது

3:10 PM : எடப்பாடி தொகுதியில் 9-வது சுற்று முடிவில் முதலமைச்சர் ஈபிஎஸ் 32,135 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

2:58 PM : 140 இடங்களில் திமுக கூட்டணி, 91 இடங்களில் அதிமுக கூட்டணி மற்றும் ஓர் இடத்தில் மக்கள் நீதி மய்யம் முன்னிலையில் இருப்பதை காணமுடிகின்றது

2:46 PM : சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இதுவரை 21,654 வாக்குகள் பெற்று அமோக முன்னிலையில் இருக்கிறார் திமுகவின் உதயநிதி ஸ்டாலின்

2:44 PM : கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் வாக்கு வித்தியாசம் 2292 ஆக உயர்ந்துள்ளது

2:37 PM : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவின் 15 அமைச்சர்கள் முன்னிலை வகிக்கின்றனர்; 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்

2:29 PM : நாகர்கோவில் தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் 4,982 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை இடத்தை பிடித்திருக்கிறார்

2.26 PM : இதுவரை திமுக கூட்டணி 8.58%, அதிமுக கூட்டணி 7.87% மற்றும் நாம் தமிழர் கட்சி 1.15% வாக்குகள் பெற்றுள்ளன

2:25 PM : தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கை சதவீத அடிப்படையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி

2:21 PM : நாகப்பட்டினத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் ஆளூர் ஷாநவாஸ் 15965 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.

2:15 PM : தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் கடம்பூர் ராஜு 10,997 வாக்குகள் பெற்று 1359 வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரனை கீழ் தள்ளி மீண்டும் அத்தொகுதியில் முதல் நிலையை தக்க வைத்துள்ளார்.

2:10 PM : கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் கடம்பூர் ராஜு வை விட 105 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்

2:05 PM : மேட்டூர், சேலம் மேற்கு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், தர்மபுரி, பெண்ணாகரம், மயிலம், உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி முன்னிலை

2:00 PM : போடிநாயக்கனூர் தொகுதியில் சற்று முன்பு இரண்டாம் நிலையிலிருந்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தற்போது 350 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் தங்கதமிழ்செல்வனை முந்துகிறார்

1:57 PM : எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி 40950 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்

1:55 PM : துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பது தெரியவருகிறது

1:54 PM : கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் நான்காவது சுற்றில் முன்னிலை வகித்து வருகின்றார்

1:48 PM : ஆவடி தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் 12027 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் நிலையில் உள்ளார்

1:35 PM : காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 1249 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்னடைவு

1:26 PM : கமல்ஹாசன் தற்போது பெற்றிருக்கும் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7074 வாக்குகளாகும்

1:23 PM : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 19,860 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்

1:21 PM : அண்ணாநகர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாம் நிலையில் இருக்கின்றனர்.

1:19 PM : திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 1639 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். திருவொற்றியூரில் முன்னிலை வகிப்பது திமுக

1:17 PM : தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்

1:14 PM : கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் முன்னிலை பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். சற்று முன்பு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலையில் காணப்பட்டார். கடும் மும்முனைப் போட்டியில் 579 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் முதலிடம் வகிக்கிறார்.

1:11 PM : காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மூன்றாவது சுற்றில் பின்னடைவு. அதிமுக வேட்பாளர் ராமுவை விட 2772 வாக்குகள் பின்தங்கியிருக்கிறார் துரைமுருகன்

1:00 PM : கோவில்பட்டியில் 6162 வாக்குகள் பெற்ற நிலையிலும் டிடிவி தினகரன் தற்பொழுது 2312 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறார்

12:50 PM : கோவை தெற்கில் காங்கிரஸ் – 4409, மக்கள் நீதி மய்யம் – 4293 வாக்குகள் பெற்றுள்ளன

12:49 PM : கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் முன்னிலை வகித்து வருகிறார். கடுமையான மும்முனைப் போட்டி கோவை தெற்கில் நிலவுகின்றது.

12:44 PM : திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவு

12:30 PM : முதல் முறையாக தேர்தல் களத்தில் போட்டியிடும் திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் 3933 வாக்குகள் பெற்று பெரும் வித்தியாசத்தில் பாமகவை முந்துகிறார்

12:27 PM : விருகம்பாக்கத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் கவிஞர் சினேகன் 641 வாக்குகளுடன் மூன்றாம் நிலை வகிக்கிறார். விருகம்பாக்கத்தில் திமுக முன்னிலையில் இருக்கின்றது.

12:24 PM : கோவில்பட்டியில் மும்முனைப் போட்டி தொடர்கின்றது. டிடிவி தினகரன் 2,183 வாக்குகளுடன் இரண்டாம் நிலையில் இருக்கிறார்

12:22 PM: அதிமுகவின் முக்கிய வேட்பாளர்களான அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் பெஞ்சமின், மற்றும் மா.ஃப. பாண்டியராஜன் பின்னடைவில் இருக்கின்றனர்

12.20 PM : 125 தொகுதிகளில் திமுகவும் 74 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை

12:18 PM : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு

12:15 PM : பழனியில் மக்கள் நீதி மய்யம் 17,000 வாக்குகளுடன் இரண்டாம் நிலையில் இருக்கும் திமுகவை விட 2000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

12:10 PM : தியாகராய நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 2-வது சுற்றில் முன்னிலையில் இருக்கிறார். இத்தொகுதியில் திமுகவிற்கு 4,872 வாக்குகளும் அதிமுகவிற்கு 3,761 வாக்குகளும் மக்கள் நீதி மய்யத்தின் பழ.கருப்பையாவிற்கு 1,125 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன

12:06 PM : திமுக மற்றும் அதிமுக முன்னிலையில் இருக்கும் தொகுதிகள் 85 ஆகவும் 61 ஆகவும் அதிகரித்துள்ளது

12:04 PM : திருமதி குஷ்பு சுந்தர் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவின் டாக்டர் எழிலன் 1973 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்

12:00 PM : கோவை தெற்கில் தொடர்ந்து திரு கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். கமல்ஹாசன் அவர்களுக்கு 2010 வாக்குகளும் காங்கிரஸின் மயூரா ஜெயக்குமாருக்கு 1926 வாக்குகளும் பாஜகவின் திருமதி வானதி சீனிவாசனக்கு 1379 வாக்குகளும் வந்திருக்கின்றன

11:57 AM : பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடக்கூடிய விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது; பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாம் நிலைக்கு வந்துள்ளது

11:55 AM : போடிநாயக்கனூரில் அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் 2520 வாக்குகளும் திமுகவின் தங்கதமிழ்செல்வன் 2157 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர்

11.53 AM : காங்கிரஸ் பாஜக போட்டியிடக் கூடிய காரைக்குடியில் தற்போது நிலவரப்படி பாஜகவின் ஹெச்.ராஜா 1412 வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் 2805 வாக்குகளை பதிவு செய்துள்ளது

11:51 AM : கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1597 வாக்குகளுடன் 994 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை முந்துகிறார்

11:50 AM : கோவை வடக்கு மற்றும் மதுரவாயல் தொகுதிகளில் அதிமுக முன்னிலை. மயிலாப்பூரில் திமுக முன்னிலை

11:48 AM : விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலை

11:45 AM : ஆலந்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பின்தங்குவதையும் அவருக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்பரசன் முன்னிலை

11:43 AM : காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா முன்னிலை

11:40 AM : தற்போதைய நிலவரப்படி திமுக 56 இடங்களிலும், அதிமுக 40 இடங்களிலும், அமமுக மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சிகள் தலா ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கின்றன

11:39 AM : அண்ணா நகரில் திமுக 1129 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

11:37 AM : சீமானின் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கில் 625 வாக்குகளுடன் மூன்றாம் நிலையில் இருக்கின்றது

11:35 AM : கமல்ஹாசனுடன் போட்டியிடும் காங்கிரசை சேர்ந்த மயூரா ஜெயக்குமார் 1,345 வாக்குகளும் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் 967 வாக்குகளும் இதுவரை பெற்றிருக்கின்றனர்

11:32 AM : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகளுடன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். கோவை தெற்கில் போட்டி சற்று பலமாகவே இருக்கின்றது

11:31 AM : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5,484 வாக்குகள் பெற்றிருக்கும் நிலையில் திமுகவின் இளம் வேட்பாளரான சம்பத்குமார் 2,159 வாக்குகளுடன் இரண்டாம் நிலையில் இருக்கிறார்

11:29 AM : விராலிமலையில் சற்று முன்பு அதிமுகவின் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பின்தங்கியிருந்த நிலையில் தற்பொழுது முன்னிலைக்கு வந்துள்ளார்

11:27 AM : தி.நகரில் திமுக முன்னிலை

11:25 AM : திமுக கூட்டணி 32 இடங்களிலும் அதிமுக கூட்டணி 28 இடங்களிலும் முதலிடம்

11:24 AM : அவினாசி, வாசுதேவநல்லூர், விராலிமலை, திருச்சிராப்பள்ளி கிழக்கு, மதுரை-மத்தி, மன்னார்குடி போன்ற இடங்களில் திமுக முன்னணி

11:22 AM : மதுரை மேற்கில் அதிமுகவின் செல்லூர் ராஜு பின்னடைவில் இருக்கிறார்

11:18 AM : தாராபுரத்தில் போட்டியிடக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. எல்.முருகன் 1,343 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்

11.16 AM : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்

11:15 AM : 19 இடங்களில் திமுக, 14 இடங்களில் அதிமுக, மற்றும் ஓர் இடத்தில் அமமுக முன்னிலை

11:09 AM : டிடிவி தினகரன் போட்டியிடக்கூடிய கோவில்பட்டி தொகுதியில் தபால் வாக்குகளை பொருத்தமட்டில் முதல் கட்டமாக அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜு முந்துகிறார்

11:07 AM : திமுக 10 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் முன்னிலை

11:05 AM : கடலூரில் அதிமுக முன்னிலை; திமுக இரண்டாம் இடம்

11:04 AM : அண்ணா நகரில் திமுக வேட்பாளர் முன்னிலை

11:02 AM : வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட அதிக தபால் வாக்குகள் பெற்றிருப்பதாக தெரிகிறது

11:01 AM : அதிமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை வகித்து கொண்டிருக்கின்றது

11:00 AM : தற்போதைய நிலவரப்படி திமுக அணி தமிழகத்தில் 9 இடங்களில் முன்னணியில் இருக்கின்றது

10:55 AM : சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம்.

10.50 AM : முதலில் தபால் வாக்குகள் பின்னர் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

10:40 AM : திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக தற்போது மாற்றப்பட்டிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!