
சென்னை , மே 11 -அண்மையில் ஒரு குரல் பதிவு வெளியானதை அடுத்து தமிழக அரசியலில் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் இன்று தகவல் தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். ஸ்டாலின்-நின் மருமகன் சபரீசனும் மகன் உதயநிதியும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை ஒரே வருடத்தில் குவித்துள்ளதாக PTR-ரின் குரல் போல் அப்பதிவில் இடம்பெற்றதை அடுத்து தமிழகத்தில் பெரும் பூகம்பம் வெடித்தது. அதனால் PTR பழனிவேல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அவர் அமைச்சு மட்டும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுளார். நாடாளுமன்ற உறுப்பினர் TR பாலுவின் மகன் TRB ராஜா புதிதாக அமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.