Latestஉலகம்

தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை : சட்டசபையிலிருந்து வெளியேறினார் ஆளுனர் ரவி

அண்மையில் தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அம்மாநில ஆளுநர் ரவி, இன்று தமிழக சட்டசபையின் கூட்ட தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதற்கு அங்குள்ள பல தரப்பிடமிருந்து பல்வேறு கண்டன குரல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில்தான் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என்று இன்றைய சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆளுநருக்கு கண்டணம் தெரிவித்ததோடு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவை குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஸ்டாலின் நிறைவேற்றினார்.

இதனால் எரிச்சல் அடைந்த ரவி அங்கிருந்து கடும் கோபத்துடன் வெளியேறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!