
கோலாலம்பூர், மார்ச்-18 – தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில், SEC எனப்படும் Saraswathy English Challenge அமைப்பு இயங்கலை வாயிலாக ஒன்றரை மணி நேர இலவச ஆங்கில வகுப்புகளை நடத்துகிறது.
நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த ஆறாமாண்டு மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.
Microsoft Teams வாயிலாக வாரம் ஒருமுறை மாலை 6.30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை இவ்வகுப்பு நடைபெறும்.
வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்குகின்றன.
இந்த இலவச ஆங்கில வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆறாமாண்டு மாணவர்கள், www.saraswathyenglishchallenge.com என்ற இணைய அகப்பக்கத்திற்குச் சென்று தங்களைப் பதிந்துகொள்ளலாம்.
மேல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையத் தளத்தையோ அல்லது 017-355 5738 என்ற கைப்பேசி எண்களுக்கு அழைத்தோ தெரிந்துகொள்ளலாம்.
இது, Basic Bay நிறுவனத்தின் ESG எனப்படும் சுற்றுச் சூழல், சமூக மற்றும் நிர்வாக கடப்பாட்டின் கீழ் தொடங்கப்பட்ட முன்னெடுப்பாகும்.