
கோலாலம்பூர், பிப் 1 – குறைவான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் , இரு வகுப்பறைகளை ஒன்றாக இணைத்து Kelas Cantuman எனப்படும் பன்மை வகுப்புகளை நடத்தும் திட்டம் நல்லத்தல்ல என கூறியிருக்கிறார் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் .
அந்த பன்மை வகுப்புகளால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தான் பாதிக்கப்படுமென அவர் கூறினார்.
இதனிடையே, நாட்டில் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து அறிய , தமது தரப்பை கல்வி துணையமைச்சர் Lim Hui Ying அழைத்து, விபரங்களை கேட்டறிந்திருப்பதாக குலசேகரன் கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன், தமிழ் அறவாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடன் அந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த சந்திப்பின்போது, தமிழ்ப்பள்ளிகளின் கட்டட பிரச்சனை, கணிதத்தையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் போதிக்கும் DLP திட்டம் , ஆசிரியர் பற்றாக்குறை, வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் பள்ளிகளுக்கான ஒதுக்கீடு ஆகியவை குறித்து துணையமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டதாக குலசேகரன் குறிப்பிட்டார்.
வணக்கம் மலேசியாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் குதமிழ்ப் பள்ளிகளின் பிரச்சனைகள் கல்வி துணையமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது ; குலசேகரன் இந்த விபரங்களை வழங்கினார்.