
கோலாலம்பூர், ஏப் 7 – புதிய பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கு மான்யம் சேர்க்கப்பட்டுள்ளதால் இது குறித்து கல்வி அமைச்சருடன் கலந்தாய்வு நடத்தப்படும் என மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கான மறுசீரமைப்பு திட்டத்தில் அனைத்து பள்ளிகளும் இடம் பெற்றுள்ளதால் வசதி குறைந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவையான மேம்பாட்டு வசதிகளும் நிர்மாணிக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
இதனிடையே குறைந்த மாணவர்களை கொண்டுள்ள தமிழ்ப் பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் நமது தமிழ் பள்ளிகளின் எதிர்கால நன்மைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.