தேசிய அளவில் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையேயான ஒற்றுமை காற்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை பண்டார் பாரு பாங்கி மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு வெஸ்ட் கண்ட்ரி தமிழ்ப்பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து ஏற்பாடுச் செய்த அப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையேயான நல்லுறவை வளர்க்கவும் எதிர்காலத்தில் கால்பந்து விளையாட்டுத் துறையில் இளம் மாணவர்களும் தங்களது ஆற்றலை வெளிக்கொணரவும், இப்போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார், பெற்றோர் ஆசியர் சங்கத் தலைவர் ஜெயகாந்தன் ஜெயசீலன்.
இந்தியாவிலிருந்தும் 2 அணிகள் பங்கேடுத்த அப்போட்டியில் முதல் நிலையை ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் இரண்டாம் நிலையை காஜாங் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடியது.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வெற்றிகோப்பையுடன் பதக்கமும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது என போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஜெயகாந்தன் கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் சமூகப் பொறுப்பு மற்றும் நிறுவனத் தொடர்புத் தலைவர் அஹ்மட் அஸ்ரி, பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷா ரெட்ஷான் ஜோஹான், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத் தலைவர் எஸ். எஸ் பாண்டியன் ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டு அப்போட்டியை சிறப்பித்துள்ளனர்.