Latestமலேசியா

தமிழ்ப் பள்ளிகள் – தமிழ்க் கல்வி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல கோரிக்கை

கோலாலம்பூர், செப் 23 – மலேசிய இந்தியர்கள் பெருந்திட்டம் 2.0 ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்வி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர். தமிப்பள்ளிகளை எப்படி மேம்படுத்துவது, தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களை அதிகரிப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்பது, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை கட்டாயமாக ஒரு பாடமாக எடுப்பது மற்றும் நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பாலர் பள்ளிகளை திறப்பது உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கோலாலம்பூர், தாமான் தெக்னோலோஜியில் ஆசிய பசிபிக் தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசியர் சங்கத்தினர், அரசு சார்பற்ற இயக்கத்தினர், பொது இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டு தமிழ்பள்ளிகளை மேம்படுத்தக்கூடிய கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற அக்கரையோடு ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணனிடம் தெரிவித்தனர்.

தமிழ் பள்ளிகளும் தமிழ் கல்வியும் நாட்டின் கல்வித்துறையியில் முக்கிய கூறுகளாக விளங்கின்றன. மலேசிய இந்தியர்களுக்கான இரண்டாவது பெருந்திட்டத்தில் தமிழ் கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் அரசாங்கதின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட வேண்டும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இம்மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றிய டத்தோஸ்ரீ எம். சரவணன் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் கொள்கைகளாக மாற்ற வேண்டும் என கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!