
ஷா ஆலாம், மார்ச் 23 – தமிழ் பள்ளிகளுக்கான சீரமைப்பு பணிகளுக்காக 25 லட்சம் ரிங்கிட் பொய் கணக்கை காட்டிய விவகாரத்தில், MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஐவரை தடுத்து வைத்தது.
40 வயதிலிருந்து 52 வயதுக்கு உட்பட்ட அந்த ஐவரும் 5 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
2022-இல், சிலாங்கூரில் உள்ள ஆரம்ப தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் தொடர்பில் அந்த ஐவரும் பொய் கணக்கை காட்டியதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.
நேற்று, சிலாங்கூர் MACC தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.