Latestமலேசியா

தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க டத்தோஶ்ரீ எம். சரவணண் தமிழகத்திற்கு பயணம்

திருச்சி, ஜூன் 23 – மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தமிழ்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் போது, அவர் தமிழ்சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள திட்டமிட்டிருக்கின்றார்.

மேலும், கண்ணதாசன் விழா, முப்பெரும் விழா என தொப்புள் கொடி உறவுகளின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க, அவர் சில இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வார் .

   

மேலும், தமது பயணத்தின் போது டத்தோ ஶ்ரீ எம். சரவணன் , தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்டவர்களையும் சந்திக்க திட்டமிட்டிருக்கின்றார். முன்னதாக, திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய அமைச்சருக்கு பிரமாண்ட முறையில் வரவேற்பு நல்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!