
கோலாலம்பூர், நவ 18 – தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழி பாடங்களை போதிப்பதற்கான ஆசிரியர்கள் தேவைக்கும் அதிகமாக இருப்பதாக கூறி பெரும் கண்டனத்திற்கு உள்ளான கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் தற்போது அப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகள் சீனப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசாங்க பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை இருப்பதாக கூறிய அவர், அது ஒரு தற்காலிகமே என்றார்.
கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் 540 சீன மொழி போதிக்கும் ஆசிரியர்களும், 340 தமிழ் பொழி போதிக்கும் ஆசிரியர்களும் தேவைக்கும் கூடுதலாக இருப்பதாக கூறியிருந்தார். ஆது தொடர்பில் சீன கல்வி அமைப்பான டோங் சோங் மற்றும் ஜியாவ் சோங் (Dong Zong மற்றும் Jiao Zong) கடும் கண்டனத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து, பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் கல்வி அமைச்சர் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை நிலவுவதாக தற்போது கூறியுள்ளார்.