Latestமலேசியா

தமிழ் – சீனப் பள்ளிகளுக்கு ஒதுக்கீட்டுக்கான விதிமுறையை அம்பலப்படுத்துவீர் – வீ.கா.சியோங்

கோலாலம்பூர், மார்ச 28 – தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கான ஒதுக்கீடுகளை பிரிப்பதில் தெளிவான அணுகுமுறை இல்லாததால் கல்வி அமைச்சில் பிரச்சனை ஏற்படும் என டத்தோஸ்ரீ Wee ka Siong தெரிவித்திருக்கிறார். ஒதுக்கீடுகளை விநியோகிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்பாடு விதிமுறை அல்லது அளவுகோல் என்னவென்று தாம் ஏற்கனவே வினவியிருப்பதையும் அவர் நினைவுறுத்தினார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை தாம் கல்வித்துறை துணையமைச்சராக இருந்துள்ளதாகவும் இத்தகைய பள்ளிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடுகள் விநியோகிக்க வேண்டும் என்பது நமக்கு தெரியாததால் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது என ம..சீ.ச தலைவருமான Wee ka Siong தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு முதல் ஒதுக்கீடுகளை பிரிப்பதில் தெளிவான ஏற்பாடு இருந்தது. ஆனால் இப்போது இந்த அணுகுமுறை இல்லையென Ayer Hitam நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!