
சென்னை , பிப் 27 – தமிழ் நாடு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. இந்த இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே எஸ் இளங்கோவன், அ.தி.மு.வின் கே.எஸ் தென்னரசு ஆகியோருக்கிடையில்தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க வின் எஸ். ஆனந்த் மற்றும் நடிகர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதிதன் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை ஆறு மணிவரை நடைபெறுகிறது. மொத்தம் இரண்டு லட்சத்து 27,547 வாக்காளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.