
கோலாலம்பூர், நவ 19 – தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் தெரிவிக்கின்றன. 160,000 மொத்த வாக்காளர்களைக் கொண்ட அந்த தொகுதியில் அன்வார் 43, 876 வாக்குகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகின. பெர்சத்து கட்சியின் துணைத்தலைவரான அகமட் பைசுல் 39,512 வாக்குகளையும் , தேசிய முன்னணயின் டத்தோ அமினுடின் முகமட் ஹனாபிபா 36,380 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர்.