Latestமலேசியா

தம்பூனில் இந்தியர்களின் வாக்குகள் எனது வெற்றியை உறுதி செய்யும் ; Ahmad Faizal Azumu

கோலாலம்பூர் , அக் 31 – பேராக், தம்பூன் தொகுதியை தாம் தற்காத்துக் கொள்வதற்கு, அத்தொகுதியில் உள்ள இந்தியர்களின் வாக்குகளே உதவியாக இருக்கப் போவதாக, பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் Ahmad Faizal Azumu கூறியுள்ளார்.

14 -வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹரப்பான் சார்பில் தம்பூனில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான Faizal , இம்முறை பொதுத் தேர்தலில் அத்தொகுதியில், எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் உட்பட பல முனை போட்டிகளை எதிர்கொள்ளவிருக்கிறார். தம்பூனில், மலாய்க்காரர்களின் வாக்குகள் , Perikatan Nasional, தேசிய முன்னணி கூட்டணிகளுக்கு இடையில் பிரியும்.

சீனர்களின் வாக்கு தனக்கு பலமாக இருக்குமென்றாலும் அச்சமூகத்தின் பெரும்பான்மை வாக்குகளைக் கவருவது கடினமே. இவ்வேளையில், 11 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் வாக்குகளே அத்தொகுதியில் தமது வெற்றியை முடிவு செய்யுமென , உள்நாட்டு ஆங்கில இணைய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் Faizal கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!