
தரம் உயர்ந்த, எளிதில் சேதமடையாத “Road Tax” சாலை வரி வில்லைகளை விநியோகிக்க, JPJ சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சாலை வரி வில்லைகள் எளிதாக சேதமடைந்து விடுவதாக மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தொடர்ந்து, அவ்விவகாரம் கவனத்தில் கொள்ளப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். அதே சமயம், JPJ முகப்புகளில் சேவையை பெறுவதற்காக, மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது வழக்கமாகியுள்ளது. அதனை தவிர்க்க, இலக்கவியல் முறையை மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அவ்விவகாரம் தொடர்பில், தமக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, அந்தோணி லோக் தெரிவித்தார். அதோடு, மக்களின் நலம் பேணும் வகையில், சாலை விதிமுறைகள் அமலாக்கமும் கடுமையாக்கப்படுமென அமைச்சர் சொன்னார்.