Latestமலேசியா

தரையிறங்கியபோது விமானம் ஓடும் பாதையிலிருந்து விலகியது

மலாக்கா, ஆக 24 – பெண் பயிற்சி விமானி ஒருவர் ஓட்டிச்சென்ற விமானம் ஓடும் பாதையிலிருந்து விலகியதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பத்து பெரண்டாம் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் இன்று நண்பகல் மணி 12. 16அளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. International Aero Training Sdn Bhd நடத்தி வந்த Piper-28 விமானம் கட்டுபபாட்டை இழந்ததால் ஓடும் தளத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து அதன் முன்புறப் பகுதி நிலத்தில் மோதி நின்றது. அவசரமாக தரையிறங்கிய தாக்கத்தினால் அந்த பெண் விமானி நெஞ்சில் கடும் வலியை எதிர்நோக்கியதால் அவர் உடனடியாக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் அவர் கடுமையான காயத்திற்கு உள்ளாகவில்லையென மலாக்கா தெங்கா OCPD ACP Chirtopher Patit தெரிவித்தார். பழுதடைந்த விமானம் நண்பகல் மணி 12.50 அளவில் ஓடும் தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து இதுவரை போலீஸ் புகார் எதுவும் பெறவில்லையென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!