
சிங்கப்பூர், செப் 2 – சிங்கப்பூரின் அடுத்த அதிபராக அந்நாட்டின் முன்னாள் துணைப்பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த அதிபர் தேர்தல் வாக்களிப்பில் 66 வயது பொருளாதார வல்லுனரான தர்மன் 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Ng Kok Song மற்றும் Tan Kin Lian முறையே 15 விழுக்காடும்
13 விழுக்காடும் பெற்றனர்.
அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சீனர் அல்லாதவர் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
பல முறை போட்டியில்லாமலேயே அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
SR Nathan- னுக்குப் பிறகு அதிபராக வரும் அடுத்த இந்தியர் எனும் பெருமையையும் தர்மன் பெறுகிறார்.
தற்போதைய அதிபர் Halimah Yacob-பின் பதவி காலம் செப்டம்பர் 13-ல் முடிவடைகிறது.
PAP கட்சியின் முன்னாள் உறுப்பினருமான தர்மனுக்கு அந்நாட்டுப் பிரதமர் Lee Hsien Loong தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தர்மன் சிங்கப்பூர் மட்டுமின்றி உலக அரங்கிலும் திறமைமிக்க தலைவர் என நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.