
அலோர்காஜா, செப் 19 – அலோர்காஜா கெமுனிங்கிற்கு அருகே காடேக் தோட்டத்தின் சாலை ஓரத்தில் புதர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 24 வயதுடைய R. தர்வீன்ராஜ் உடலில் 18 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸைனோல் சமா கூறினார். கொலை செய்யப்பட்ட தர்வவீன்ராஜ் கூர்மையான ஆயுதத்தினால் கழுத்து, நெஞ்சு,இரு கைகள் ,கால்களிலும் குத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அழுகிய நிலையில் கடந்த சனிக்கிழமை தர்வீன்ராஜ் உடல் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கழுத்தில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டதால் அவர் இறந்துள்ளார் என சவப் பரிசோதைனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக ஸைனோல் சமா கூறினார். நெகிரி செம்பிலான் ,தம்பினைச் சேர்நத் தர்வீன் ராஜ் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் காணவில்லையென அவரது குடும்பத்தினர் புகார் செய்திருந்தனர்.