
அலோர் காஜா, செப் 18 – நெகிரி செம்பிலானின் தம்பினில் கடந்த 10 நாட்களாக காணாமல்போன 24 வயதுடைய R . தர்வீன் ராஜ் உடல் மலாக்கா அலோர்காஜாவுக்கு அருகே Percha காட்டுப் பகுதியில் ஒரு புதருக்கு அருகே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பின் ஆடவர் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தம்மிடம் போலீசார் தெரிவித்தாக தர்வீன் ராஜ் தாயார் 55 வயதுடைய k. Vathama தெரிவித்தார். அந்த உடல் குறித்த அடையாளத்தை மருத்துவமனை தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அது எனது மகனின் உடல் என நாம் நம்புகிறோம். அவர் தமது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்காலம் என்றும் Vathama தெரிவித்தார். தர்வீன் ராஜ் தமது மோட்டார் சைக்கிளை 4,000 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்திருந்தார். இந்த பணத்தை அவர் வைத்திருந்தார். இந்த பணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமா என்று தெரியவில்லை. எனினும் தர்வீன் ராஜ்ஜிக்கு காதலி யாரும் கிடையாது. அவர் தம்பின் , Taman Bukit Ria விலுள்ள எங்களது வீட்டில் அந்த பணத்தை வைத்திருக்கவில்லை என Vathama தெரிவித்தார்.
அவர் காணாமல்போனதற்கு சில நாட்களுக்கு முன் தமது Yamaha 1257 மோட்டார் சைக்கிளை வாங்கக்கூடியவர்கள் எவரும் இருக்கிறார்களா என தனது நண்பகர்களிடம் கேட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இந்த புதன்கிழமை சாங்கி விமான நிலையத்தில் வேலைக்கு செல்லவிருப்பதால் பணம் தேவைப்படுவதற்காக அவர் அந்த மோட்டார்சைக்கிளை விற்பதற்கான நடவடிகையில் ஈடுபட்டுவந்தார். இருவர் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான தர்வீன் ராஜ் தனது 17 வயது சகோதர் மற்றும் மேலும் சில நண்பர்களுடன் செம்டம்பர் 9 ஆ தேதி இரவு படம் பார்க்க சென்றபோது காணாமல்போனதாக Vathama தெரிவித்தார், இதனிடையே மூவர் கொண்ட கும்பல் ஒன்று ஆடவர் ஒருவரை தாக்கி அவரை காருக்குள் இழுத்துச் செல்லும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரானது. அந்த சம்பவத்தை போலீசார் உறுதிப்படுத்தினர். இதனிடையே செம்டம்பர் 10 ஆம்தேதி காலையில் தர்வீன்ராஜை அவரது நண்பர்கள் ஆகக்கடைசியாக பார்த்துள்ளனர் என தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்டன் Amiruddin Sariman தெரிவித்தார்.