கோலாலம்பூர், பிப் 22 – தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹூசெனுக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.
ஹிஷாமுடினுக்கு எங்கிருந்து கோவிட் தொற்று பரவியது என்ற விபரம் தெரிய வராத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட PCR சோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்பதையே காண்பித்ததாக அவரது அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
ஜோகூரில், மஇகா பணிப்படையின் தொடக்க விழாவின் போது, கோவிட் SOP -களை மீறியதற்காக கடந்த வாரம் ஹிஷாமுடினுக்கு சுகாதார அமைச்சால் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.