
காபுல், மார்ச் 10- ஆப்கானிஸ்தானில் Balkh மாநிலத்தின் தலிபான் கவர்னர் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். காபுலிலிருந்து வருகை புரிந்த அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த ஒரு நாளுக்குப் பின் Mohammad Dawood Muzammil என்ற அந்த கவர்னர் மரணம் அடைந்தார். அவரது அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெற்ற அந்த தாக்குதலில் Mohammad Dawood-டுடன் மேலும் ஒரு நபரும் கொல்லப்பட்டார். 2021 ஆம் ஆண்டு தலிபான் தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆளும் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவராகவும் Mohammad Dawood இருந்து வந்தார்.