வாஷிங்டன், மே 10 – ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் இளம் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட சில சட்டங்களை மீட்டுக்கொள்வதற்காக தலிபான் அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும். பதின்ம வயது பெண் பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் கல்வியை தொடர்வதற்கு ஆப்கான் தீவிரவாத தரப்புக்கள் தடைவிதித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தலிபான் அரசாங்கத்துடன் நேரடி பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பெண்களின் உரிமைகளை பாதிக்கும் விவகாரம் தொடர்ந்தால் தலிபான் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.