
கோலாலம்பூர், ஜன 21 – கோலாலம்பூர் Jalan Parlimen னில் ஆடவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவர் காயம் அடைந்தார். இன்று காலை மணி 9.21க்கு இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் உடனயாக விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் அக்காரில் சிக்கிக்கொண்ட ஆடவரை மீட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் அதிகாரி Hashmahwi Abdul தெரிவித்தார். 30 வயதுடைய கார் ஓட்டுனர் தலை மற்றும் நெஞ்சில் காயத்திற்கு உள்ளானனதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டியின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.