கோலாலம்பூர். பிப் 14 – கெடா அரசாங்கத்திற்கு அம்னோ ஆதரவு வழங்குவதால் அது நிலைத்தன்மையாக இருக்கிறது. அதே வேளையில் மந்திரிபுசார் முகமட் சனுசி உட்பட பாஸ் தலைவர்கள் தலைக்கனத்தோடு செயல்படக்கூடாது என அம்னோ நினைவுறுத்தியுள்ளது. அமனோவின் பொறுமையை சீண்டிப் பார்க்கும் வகையில் கெடா பாஸ் தலைவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தால் நாங்கள் அதனை பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கமாட்டோம் என கெடா அம்னோ தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மலேசியாவிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் அம்னோ ஆட்சியில் இல்லாமல் இருப்பதால்தான் நாடு அரசியல் நிலைத்தன்மையுடன் இருப்பதாக மந்திரிபுசார் முகமட் சனுசி கூறியிருந்தது வரம்பு மீறிய பேச்சு என அம்னோ தலைவர்கள் சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close