கோலாலம்பூர், ஏப்ரல் 23 – தலைநகரில், நடைபாதைகளில் வறுத்த சோளத்தை விற்கும் வெளிநாட்டு வியாபாரிகளின் நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
அதனை களையும் நோக்கில், DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர்.
ஜாலான் சலோமாவிலுள்ள, அம்பாங் LRT நிலையம், சலோமா பாலம் ஆகிய இடங்களை குறி வைத்து அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த சோதனையின் போது, சோளங்கள் உட்பட அவற்றை வறுக்க பயன்படுத்தப்படும் சமையல் உபகரணப் பொருட்கள், பிளாஸ்டிக்குகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
தலைநகரின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதுபோன்ற நடவடிக்கைகளை களைய ஏதுவாக, அங்குள்ள 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும், அதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென, கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.