
கோலாலம்பூர், ஜன 27 – தலைநகரில் நடைபெற்ற 126-வது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் நினைவு விழாவில், கலந்து கொண்டு டத்தோஸ்ரீ தெய்வீகன் சிறப்புரை ஆற்றினார்.
தமது உரையில், 74-வது ஆண்டு குடியரசு தின விழாவைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கும், இந்திய தூதர் ஸ்ரீ B.N Reddy -கும், துணைத் தூதர் சுபாஷினி, தூதரக அதிகாரி அம்ருதா அம்மையாருக்கும் அவர் வாழ்த்தினைத் தெரிவித்தார்.
மேலும், நேதாஜி அறவாரியத் தலைவர் திரு இராதாகிருஷ்ணன், செயலவயினர் டத்தோ குமரன், திரு பாலகிருஷ்ணன்; திரு ஜெயகுமார், முன்னாள் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் உயர்திரு நாராயணசாமி, லெப்டினன் சுந்தரம், தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இவ்வேளையில் தமதுரையில், நேதாஜியிடம் இருந்த தலைமைத்துவத் திறமையை, அறிவை, ஆற்றலை, தைரியத்தை மாணவர்கள் பெறவேண்டுமென தெய்வீகன் கூறினார்.
மேலும், நாட்டுக்காக போராடிய, தியாகம் செய்த சமூக அரசியல் தலைவர்களின் சரித்திரத்தை வாசிக்கும்படியும் அவர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், மாணவர்களுக்கு பண உதவி வழங்கிய நேதாஜி அறவாரியத்திற்கு நன்றியும் பாராட்டும் கூறிய தெய்வீகன், துடுக்கான மாணவர்களைத் மிடுக்கானவர்களாக மாற்றுதல் நம் அனைவரின் கடமையாகுமெனவும் குறிப்பிட்டார்.