கோலாலம்பூர், பிப் 13 – இவ்வாண்டு மாசி மகத் திருவிழா, வியாழக்கிழமை ( 17.02. 2022 ) 4. 30 மணிக்கு மேல், தலைநகர், ஜாலான் துன் எச். எஸ். லீ-யிலுள்ள ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ளது.
அத்திருவிழாவை முன்னிட்டு நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சி போன்ற கலை படைப்புகளும் நடைபெறும்.
இரவு மணி 8.30-க்கு மேல் விசேச பூசை தீபாரதனையைத் தொடர்ந்து, ஶ்ரீ கணேசப் பெருமான், ஶ்ரீ தேவி பூதேவி சமேத, ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய உள்வீதியில் வலம் வருவார்.
அந்த திருவிழாவில், பக்த பெருமக்கள் தவறாது வருகை தந்து இறையருள் பெற்றுய்யுமாறு , ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தேவஸ்தான தலைவரும், உபய நாட்டாண்மையுமான டான்ஶ்ரீ ஆர். நடராஜா கேட்டுக் கொ ண்டார்.