
கோலாலம்பூர், டிச 28 – கட்சி தேர்தலுக்குப் பின் அம்னோ உயர் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் நடப்பு அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு மிரட்டல் ஏற்படாது என நஸ்ரி அஸிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டில் அம்னோ கையெழுத்திட்டதால் பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கத்திற்கு பாதிப்பு எதுவும் இருக்காது என Padang Rengas அம்னோ டிவிசன் தலைவருமான நஸ்ரி கூறினார். அம்னோவில் ஏற்படும் தலைமைத்துவ மாற்றத்தினால் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் முதுகில் குத்தும் துரோகத்தை கட்சியின் பழைய தலைவர் என்ற முறையில் தாமும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அவர் தெரிவித்தார்.