ஈப்போ, ஆக 8 – 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பில் குழந்தை பராமரிப்பாளரான 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்ததாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸ் மாட் அரிஸ் ( Aziz Mat Aris ) தெரிவித்திருக்கிறார். குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கண்டதைத் தொடர்ந்து அந்த குழந்தையின் தந்தையிடமிருந்து திங்கட்கிழமை இரவு மணி 7.20 மணியளவில் போலீஸ் புகாரைப் பெற்றனர். மறுநாள் இரவு மணி 11.10 அளவில் அந்த குழந்தை இறந்ததாக மருத்துவர்களிடமிருந்து தகவலைப் பெற்றதாக அஸிஸ் கூறினார்.
அந்த குழந்தையின் உடலில் நேற்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டதில் தலையில் ஏற்பட்ட காயத்தினால் அந்த குழந்தை இறந்ததாக தெரியவந்தது. இது குறித்து விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என அஸிஸி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.