கோலாலம்பூர், பிப் 27- இன்ஸ்பெக்டர் பதவி வகிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
35 வயது மதிக்கத்தக்க அந்த போலீஸ் அதிகாரி கோலாலம்பூர், ஜாலான் செலிங்சிங்கில் உள்ள வீடொன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் வேலை செய்து வந்தவர் என செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பெ எங் லாய் தெரிவித்தார்.
அந்த போலிஸ் அதிகாரி தலையில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படும் வேளையில் இன்று மதியம் மணி 3. 30 -க்கு அந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.