Latestஉலகம்

தளபதி67 : விஜய், லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் புதிய படம் அறிவிப்பு

மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு, இளைய தளபதி விஜய்யும், இயக்குனர் லோகேஸ் கனகராஜும் இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

அந்த புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், #தளபதி67 என அது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்திற்கு லலித் குமார் நிதியுதவி செய்கிறார்.

தளபதி67 படப்பிடிப்பு வேலைகள் இம்மாதம் இரண்டாம் தேதி தொடங்கியதை, அதன் தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தளபதி67 திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் வேளை ; சண்டை காட்சிகளுக்கு ஸ்டண்ட் மாஸ்தர் அன்பரிவும், ஒளிப்பதிவுக்கு மனோஜ் பரமஹன்சாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

எனினும், அப்படத்தில் இணைந்து பணியாற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!