கோலாலம்பூர், பிப் 16 – இன்று மதியம் “கோவிட் தொற்று எதிரான மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டரைச் செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 42 பேர் உயிரிழந்திருப்பதாக” தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக நாங்கள் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் உண்மையிலேயே, 42 பேர் இறந்திருப்பதாக தங்கள் தரப்பு புகார் பெறப்பட்டதாகத்தான் தேசிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியிருந்தது.
இந்த தகவலை தவறுதலான புரிதலோடு வெளியிட்டதற்கு நாங்கள் உண்மையிலேயே வருந்துகிறோம்.
அந்த செய்தி உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டுவிட்டது. முன்கூட்டியே அச்செய்தியை பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை யாரும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.