
கோலாலம்பூர், செப் 26 – தவறான முதலீட்டுத் திட்டத்தால் ஒரு மில்லியன் ரிங்கிட் கடனுக்கு உள்ளாகி ,வாழ்க்கை தலைகீழாக மாறியதால் கையில் பணமின்றி , வீட்டை இழந்து , ஒரு ஆண்டு காலமாக மலேசிய இளைஞரான 27 வயதுடைய ஆரிஃப் லோக்மான் பீட்டர் லிசுட் புரோட்டான் வீரா காருக்குள் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவர் ஒரு காலத்தில் அழகான வீடுகள் மற்றும் இறக்குமதி கார்களை தனது உடைமையாக வைத்திருந்தவர் என்று பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு வளமான தொழிலதிபராக இருந்தார். தோல்வியடைந்த முதலீட்டின் காரணமாக RM1 மில்லியன் கடனில் அவர் சிக்கிக் கொண்டார். ஆரிஃப் பீட்டர் என்று அன்புடன் அழைக்கப்படும் அவர், டிஜிட்டல் நாணய முதலீடுகளில் தோல்வியடைந்த முயற்சியே தனது வீழ்ச்சிக்கு காரணாக இருந்ததாக வேதனையோடு தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தபோதிலும், நான் முதலீட்டை அதிகமாக நம்பி, பொதுமக்களிடமிருந்து முதலீட்டை ஈர்க்க அதை ஒரு ‘தொடர்பாளராக’ மாற்றியதுதான் நன் செய்த பெரிய தவறாகும். முதலீட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் பொதுமக்களுக்கு உதவுவதாக இருந்தது. ஆனால் அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள் தலைமறைவாகிவிடுவார்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, கால்நடை வளர்ப்புத் தொழிலையும், இரண்டு வீடுகளையும், மூன்று கார்களையும், ஒரு வேனையும் விற்றார். இன்றுவரை, அவர் கடனில் இன்னும் RM100,000 மீதம் உள்ளது மற்றும் ஒரு மாதத்திற்கு முன்பு முழுநேர வேலையைப் பெற்றிருந்தாலும் தற்போது பல பகுதிநேர வேலைகளை செய்கிறார். புரோட்டோன் வீரா காருக்குள் வாழ்வது முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிரமமாக இருந்தன. ஆனால் இப்போது நான் தூங்கும் வரை வசதியாக இருக்கிறது மற்றும் மழை மற்றும் வெயிலில் இருந்து தங்குமிடம் தேடுகிறேன் என அவர் தெரிவித்தார்.