
கோலாலம்பூர், ஆக 21 – மதம் மாறுவது அவரவரின் தனிப்பட்ட உரிமையாகும். ஆனால் ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவர் ஓர் இந்துவை மதம் மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது தவறான முன்மாதிரியாகும் என சரவணம் குறிப்பிட்டார்
பிரதமர் என்பவர் அனைத்து சமூகத்திற்கும் தலைவர். அனைத்து சமயங்களையும் பாதுகாக்கக்கூடியவராகவும் அவர் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இன்று ம.இ.கா-வின் புதிய தலைமையக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோது டத்தோஸ்ரீ சரவணன் இதனைத் தெரிவித்தார்.